இப்படி உருவானதா பூர்விகா மொபைல்ஸ் ஷோரூம் (Poorvika Mobiles Showroom)

முயற்சியின் உச்சம்

வணக்கம் நண்பர்களே,

பூர்விகா மொபைல்ஸ் (Poorvika Mobiles) வெறும் 175 சதுர அடியில் தன்னுடைய முதல் கடையை ஆரம்பித்து இன்றைக்கு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி நான்கு மாநிலங்களில் 65 க்கும் மேற்பட்ட நகரங்களில் மொத்தமாக 275 க்கும் மேற்பட்ட பூர்விகா (Poorvika Mobiles) ஷோரூம்ஸ் என்று பூர்விகா மொபைல்ஸ் (Poorvika Mobiles) பிரம்மாண்ட வளர்ச்சி அடைந்திருக்கிறது, இன்றைக்கு சவுத் இந்தியாவில் ஆன்லைன் மட்டுமில்லாமல் ஆஃப்லைனில் இருக்கக்கூடிய மொபைல் சந்தையில் 65% சதவீத மொபைல் சந்தையை தன்னுடைய கைக்குள் வைத்திருக்கிறது பூர்விகா மொபைல்ஸ் (Poorvika Mobiles) அவர்களைப் பற்றி ஒரு சிறிய தொகுப்பு.

பூர்விகா மொபைல்ஸ் (Poorvika Mobiles) ஓனர் (owner) யுவராஜினுடைய அப்பா திண்டிவனத்தை சேர்ந்தவர் திண்டிவனத்தில் இருந்து சென்னைக்கு பிழைப்பு தேடி வந்து கோடம்பாக்கத்துல சின்னதா ஒரு ஜூஸ் கடை ஆரம்பிக்கிறார். யுவராஜ் அவரோட சின்ன வயசுல இருந்து ஸ்கூல் முடிஞ்சதும் விளையாட போகாமல் ஜூஸ் கடைக்கு வேலைக்கு வந்துவிடுவார், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, பண்டிகை திருவிழா எந்த நாட்களாக இருந்தாலும் அப்பாவினுடைய ஜூஸ் கடையில் தான் இருப்பார். அதுமட்டுமில்லாமல் உடம்பு சரியில்லை என்றாலும் ஜூஸ் கடைக்கு வந்து தான் ஆக வேண்டும். கடையை சாத்திவிட்டு வீட்டுக்கு செல்ல இரவு 10 மணி ஆகிவிடும் அதுக்கு அப்புறம் தான் வீட்டுப்பாடம் (home work) படிப்பு. இப்படியே தன்னுடைய நேரத்தை கடையிலேயே கழித்தாலும் படிப்பில் முதல் மாணவனாக தேர்ச்சி பெறுபவர். கடையில் வேலை பார்க்கும் எந்த ஒரு ஊழியரையும் யுவராஜ்னுடைய அப்பா நம்ப மாட்டார். கடையை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் யுவராஜ் TATA GROUP OF COMPANY-யை பத்தி ஒரு பத்திரிகையில் படிக்கிறார். TATA Company உப்பிலிருந்து லாரி வரைக்கும் நூற்றுக்கணக்கான தொழில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று அவருக்கு தெரிய வருகிறது. இதைப் படித்ததும் அவருக்குள் ஒரு ஆச்சரியம். ஏனென்றால் தன்னுடைய அப்பாவால் 200 சதுர அடி கூட இல்லாத இந்த கடையை தனியாக நடத்த முடியல, TATA எப்படி ? நூற்றுக்கணக்கான கம்பெனிகள், லட்சக்கணக்கான தொழிலாளர்களை வைத்து பிசினஸ் பண்றாங்கன்னு யோசிக்கிறார்.

அந்த டைம்ல ஒரு முக்கியமான முடிவு எடுக்கும் யுவராஜ் நம்ம எந்த பிசினஸ் செய்தாலும் அந்த பிசினஸ் வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்கிறார். அப்பாவுடைய கடையை பார்த்துக் கொண்டதால் அப்போவே பேலன்ஸ் சீட் (Balance Sheet) எப்படி போடுவது பேங்க் வேலை ஊழியர்களை எப்படி வேலை வாங்குவது, ஸ்டாக் பார்ப்பது, ஆர்டர் கொடுப்பது, ஆர்டர் வாங்குவது அத்தனையிலும் அத்துப்படி. யுவராஜ் பிளஸ் டூ (+2) முடித்த பிறகு அண்ணா யுனிவர்சிட்டியில் பி ஈ  மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் (BE Mechanical Engineering) படிக்கிறார். அப்போ இன்ஜினியரிங் படிக்கிறவர்களுக்கு இருக்கிற ஒரே கனவு வெளிநாடு போய் வேலை செய்யணும் என்பதுதான். இருந்தாலும் யுவராஜ் இந்தியால தான் பிஸ்னஸ் பண்ணனும் என்றும், அதுவும் நான் இல்லாமலேயே பிசினஸ் நடக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு உறுதியாக இருந்திருக்கிறார். ஆனால், அது எப்படி சாத்தியம் ! என்று அவருக்கு புரியவில்லை. எங்கு சென்றாலும் அந்த கடையில் ஓனர் இருக்காரா இல்லையா என்றுதான் முதலில் பார்ப்பார். அப்படி முதலாளி இல்லை என்றாலும் பிஸினஸ் எப்படி நடக்கிறது என்று ஆராயத் தொடங்குவார். அப்படி இருக்கும்போது அவர் பிஈ (BE) Final year ப்ராஜக்ட் பண்ண Hindustan Unilever limited கம்பெனிக்கு செல்கிறார். அப்பொழுது, அவ்வளவு பெரிய கம்பெனிக்கு முதலாளி வருடத்திற்கு ஒரு முறை தான் வருவார் அதுவும், ஒரு மணி நேரம் தான் இருப்பார் என்பது யுவராஜுக்குதெரிய வருகிறது. ஆயிரம் கோடி ரூபாய் பிசினஸ் செய்யும் ஒருத்தர் தான் நடத்தும் நிறுவனத்திற்கு வருடத்தில் ஒரு முறை தான் வருவார் என்பது தெரிந்ததும் யுவராஜின் அந்த ஒரு யோசனை அவரை பல நாள் தூங்க விடவில்லை. ஒருவழியா அவருடைய ப்ராஜெக்ட் முடிகிறதுக்குள் அங்கு இருப்பவர்களிடம் அது எப்படி என்று கேட்கிறார். அப்பொழுதுதான் அவங்க முதலாளி இருக்க வேண்டிய இடத்தில் ஒரு கம்ப்ளீட் சிஸ்டம் இருக்கும் என்று விவரிக்கின்றனர். இன்னார் இந்த வேலையை செய்யனும் இவ்வளவு பெயர் செய்ற வேலைய ஒரு மேனேஜர் கண்காணிக்கவும் அந்த மேனேஜரை ஒரு சிஇஓ ( CEO )கண்காணிக்க வேண்டும்.  சிஇஓ (CEO) என்ற செயல் தலைவர் முதலாளியின் உடைய அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிப்பார் என்றும் சிஸ்டம் பத்தி விவரிக்கின்றனர் அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள். இந்த மாதிரி பிராஜக்ட் பண்ண போன இடத்தில பிசினஸ் பற்றி நல்லா தெரிந்து கொள்கிறார் யுவராஜ். பிசினசை பற்றி இன்னும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டுமென்று பிஈ (BE) முடித்ததும் எம்பிஏ (MBA) படிக்கிறார் யுவராஜ். சகமாணவர்கள் எம்பிஏ (MBA) படித்து நல்ல மார்க் வாங்கி ஒரு பெரிய கம்பெனியில் சேர வேண்டும் என்ற எண்ணத்துடன் படிக்கும்போது யுவராஜ் மட்டும் தான் எப்படி பெரிய தொழிலதிபர் ஆகவேண்டும்  என்ற ஒரு கனவுடன் எம்பிஏ (MBA) படிக்கிறார். 

அதே நேரத்தில் யுவராஜினுடைய அப்பா ஜூஸ் கடையை மூடிவிட்டு லாட்டரி கடையை நடத்திவருகிறார். அப்பாவுடன் சேர்ந்து லாட்டரி சீட்டு கடையை  நடத்திக் கொண்டிருக்கும் பொழுது யுவராஜுக்கு திருமணம் முடிகிறது. 

திருமணத்துக்குப் பிறகு சின்ன சின்ன விஷயத்துக்கும் உங்கள் அப்பாவையே எதிர்பார்க்க முடியாது நீங்க சொந்தமா பிசினஸ் பண்ணுங்க என்று அவருடைய மனைவி பாசிட்டிவா மோட்டிவேட் பண்றாங்க, அப்பாவினுடைய பூரண சம்மதத்துடனும் மனைவியினுடைய பாசிட்டிவ் மோட்டிவேஷனுடன் (Motivation) லாட்டரி சீட் மொத்தமா விற்பனை பண்ற பிசினஸ்யும் ஆரம்பிக்கிறார். லாட்டரி சீட்டு பிசினஸ் கொஞ்சம் கொஞ்சமா நல்லா வளர்ந்து போகும்போதுதான் ஒரு பெரிய அதிர்ச்சியை சந்திக்கிறார் யுவராஜ். அது என்னவென்றால் தமிழ்நாடு அரசு லாட்டரி சீட் பிசினஸை மொத்தமாக தடை செய்துவிட்டது. 


அப்போதுதான் திருமணமாகியிருந்த நேரம் சின்ன வயதில் இருந்தே பிசினஸ்தான் கனவு என்று இருந்ததால் வேற எந்த வேலைக்கும் போகவும் பிடிக்கல இவருடைய மனைவி நீங்க வேலைக்கு போக வேண்டாம் பிசினஸையே பாருங்க அப்படின்னு அவங்களோட முடிவுக்கு பக்கபலமாய் இருந்திருக்காங்க. பின்னர், என்ன பிசினஸ் பண்ணலாம் ? யோசிச்சு சூப்பு கடை ஆரம்பித்திருக்கிறார் யுவராஜ். அப்போ டீக்கடைக்கு இருந்த ஆதரவு கூட சூப்பு கடைக்கு இல்லை. பிரியாணி போட்டா நல்லா போகும் என்று பிரியாணி கடை ஆரம்பித்திருக்கிறார். ஆனா அதுவும் சரியா போகல போட்ட முதல் கைக்கு வந்தா போதும் என்று ஆகிவிட்டது. பைக் எடுத்துட்டு டி நகரிலிருந்து (T Nagar) பாரிஸ் (Paris) வரைக்கும் அடுத்து என்ன பண்ணலாம்னு பார்த்துக் கொண்டே போவாராம் யுவராஜ். அப்போ யுவராஜ் உறவினர் ஒருவர் பழைய செல்போன்களை வாங்கி விக்கிற பிசினஸ் பண்ணீருக்காரு. செல்போன் பிசினஸ் பண்ணுங்கனு அவர்தான் யுவராஜ்க்கு ஐடியா கொடுத்திருக்கார். செல்போன் எல்லாம் ஆடம்பரமாக இருந்த காலத்தில் இதுக்கு உண்மையாலுமே டிமாண்ட் இருக்கா என்று பல ஊர்களில் சுற்றித் திரிந்து மார்க்கெட் ரிசர்ச் பண்ணி இருக்காரு. 

செல்போன் ஆடம்பரமான விஷயமல்ல கூடிய சீக்கிரமே அது அத்தியாவசியமான விஷமாக மாறும் என உறுதியாக நம்புகிறார். தன்னோட எதிர்காலத்தை சேர்த்து இந்த உலகத்தோட எதிர்காலத்தையும் அவர் கணிக்கிறார். தன்னுடைய இந்த முடிவை மனைவிக்கு தெரிவித்திருக்கிறார். அவங்க சென்னையில 5 ஆயிரம் பேருக்கு மேல செல்போன் விக்கிறாங்க அவங்க கூட நம்ம போட்டி போட முடியுமா? அதுக்கு அவர் போட்டியில எத்தனை பேரு வேணும்னாலும் கலந்துக்கலாம் வெற்றி தோல்வி என்று எது வேணும்னாலும் கிடைக்கலாம். நாம நம்மளுடைய முழு உழைப்பையும் திரட்டி முயற்சி செய்யலாம். மேலும் நாம எல்லார் மாதிரியும் இல்லாமல் செல்போன் விற்பதையே ஒரு பிரண்டா மாத்தணும்னு உறுதியா சொல்லி இருக்கார். 

இப்போ அந்த 5 அயிரம் பெயரில் ஐந்து பேராவது இருக்காங்களான்றது தெரியல. எல்லாரையும் பூர்விகா (Poorvika Mobiles) என்ற புயல் தான் அடிச்சிருச்சு என்று கூட சொல்லலாம். என்னதான் பிஈ இன்ஜினியரிங் (BE Engineering) எம்பிஏ (MBA) படித்து இருந்தாலும் செல்போன் பத்தின பயிற்சி வகுப்பு கிண்டியில் மூணு மாதம் படிச்சிருக்காரு. 2000 ரூபா முதலீடு இருந்தால் சூப் கடை, பிரியாணி கடை வைக்கலாம். ஆனால், செல்போன் பிசினஸ் பண்ணனும்னா மினிமம் ரெண்டு லட்சமாவது தேவைப்படும். அவர்கிட்ட வேலை பார்த்த சொந்தக்காரர் ஒருவர் கடன் தர முன்வருகிறார். தன்கிட்ட வேலை பார்த்தவர்கிட்டயே கடன் வாங்குவதா! என்று யோசித்து இந்த நிலை மாறும் என்று முழுமையாக நம்புகிறார். ஐம்பது வருஷத்துக்கு முன்னாடி தன் அப்பா ஆரம்பித்த ஜூஸ் கடையிலேயே இன்டீரியர் டெகரேட் (Interior Decorate) எல்லாம் வடிவமைக்கப்பட்டு அழகான ஒரு மொபைல் கடையை உருவாக்கி 5 ஊழியர் 5 செல்போன் என்று 2004 மார்ச் 31 தேதியில் பூர்விகா (Poorvika Mobiles) மொபைலுடைய முதல் பயணத்தை துவங்குகிறார் யுவராஜ். 

ஒரு வாரம் எந்த செல்போனும் விற்கவில்லை. ஏழாவது நாள் முதல் செல்போன் விற்க, கோடம்பாக்கம் அவர் பிறந்து வளர்ந்த ஏரியா என்று நம்ம பையன் செல்போன் கடை ஓபன் பண்ணி இருக்கிறான் என்று ஏரியா கரங்க அமோக வரவேற்பு கொடுத்தாங்க. எல்லாரும் அதிக விலையை வச்சிருக்கிற அதே நேரத்தில் யுவராஜ் நியாயமான விலையை வைத்தார். அதுக்கப்புறம் ஆறு மாசத்துல ஒரு நாளைக்கு ஒரு செல்போன் என்று அவர் வித்திருக்கிறார். பூர்விகா (Poorvika Mobiles) மொபைல் உடைய இரண்டாவது  ஆண்டில் இரண்டாவது கிளையை கீழ்ப்பாக்கத்தில் துவங்குகிறார். அதுக்காக ஐந்து லட்சம் ரூபாய் வங்கியில் லோன் எடுக்க முயற்சி செய்கிறார். ஆனால், பேங்க்ல ஒரு லட்ச ரூபாய் லோன் வாங்க மட்டும்தான் தகுதியுள்ளது என்று பேங்க் நிர்வாகிகள் சொல்லிட்டாங்க. சரி என்று மற்றொரு வங்கியில் போய்க் கேட்கிறார்.அவங்களும் உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் லோன் வாங்க மட்டுமே தகுதி உள்ளது என்று சொல்லிவிட்டனர். 

யுவராஜ் சோர்ந்து போகவில்லை தன்னுடைய தைரியத்தை பயன்படுத்தி 5 வங்கியில் தலா ஒவ்வொரு லட்சம் என்று ஐந்து லட்சம் லோன் வாங்குகிறார். யுவராஜ்னுடைய தன்னம்பிக்கையும் தைரியமும் வீண்போகவில்லை. அடுத்த ஆறே மாதத்தில் லோனை அடைத்துவிட்டு தன்னோட மூணாவது கிளையை பரபரப்பான டிநகரில், பாண்டிபஜாரில் ஆரம்பிக்கிறார். பிறகு ஒரே வளர்ச்சிப் பாதை என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ்நாடு முழுக்க பூர்விகா மொபைல்ஸ் (Poorvika Mobiles) பரவலாக ஆரம்பித்துவிட்டது. தமிழ்நாட்டுல எங்க மொபைல் ஷோரூம் திறக்கணும் என்று நினைத்தாலும் அவரே தனியாக நடந்து எந்த இடத்துல ஷோரூம் ஓபன் பண்ணினால் நல்ல பிசினஸ் ஆகும் அப்படின்னு இடத்தை பார்த்ததுக்கு பிறகு, என்னதான் கார்ல போற வசதி இருந்தாலும் பஸ்ஸில போயி மக்கள் எந்த மாதிரி மொபைல் யூஸ் பண்றாங்க, எந்த மாதிரி மொபைல பாராட்டுறாங்க, எந்த மாதிரி மொபைலை வேணும்னு நினைக்கறாங்க, எந்த மாதிரி மொபைல வேண்டாம் என நினைக்கிறார்கள் என்று தெரிந்த பிறகுதான் அந்த இடத்துல மொபைல் ஷோரூம் ஐ துவங்குவார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் 65 நகரங்களிலும் மொத்தமாக 275 க்கும் மேற்பட்ட பூர்விகா (Poorvika Mobiles) ஷோரூம் என்று ஒரு பிரம்மாண்ட வளர்ச்சியை அடைந்திருக்கு. இன்னைக்கு சவுத் இந்தியால ஆன்லைன் இல்லாம ஆஃப்லைனிலும் வைக்கக்கூடிய மொபைல் சந்தையில் 65% மொபைல் சந்தையை தனது கைக்குள் வைத்து இருக்கிறது பூர்விகா மொபைல்ஸ் (Poorvika Mobiles).

 அது மட்டும் இல்லாமல் இன்னைக்கு பூர்விகா மொபைல்ஸ் (Poorvika Mobiles) தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 2000 ஆயிரம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது. சாதாரண செல்போன் விக்கிற கடையை ஆரம்பித்து இன்னைக்கு அதையே பிரண்டா (Brand) மாத்தினதுக்கு காரணம் அவர், அவர்மேல வச்சிருந்த நம்பிக்கையும் அவர் மனைவியோட பாசிட்டிவ் மோட்டிவேஷன் தான் காரணம் என்று அவரே சொல்கிறார். செய்யக்கூடிய செயல்கள் பெரிதாய் இருக்கிறது மட்டுமில்லாம நம்ம எண்ணக்கூடிய எண்ணங்களும் உயர்வாக இருக்க வேண்டும்.


கடின உழைப்பும்நேர்மையான குறிக்கோளும், தொழில் ஆர்வத்துடனும் செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.

No comments:

Post a Comment