Wrestling வீரர் | Cinema பிரபலம் Dwayne Johnson என்கின்ற The Rock-ன் வாழ்க்கை வரலாறு !


முயற்சியின் உச்சம்

வணக்கம் நண்பர்களே,


வெற்றியை சிலர் அதிஷ்டத்திடம் இருந்து பெற்றுக் கொள்வார்கள். மேலும் சிலர் தங்களது குடும்பத்திடம் இருந்து பெற்றுக் கொள்வார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே அதனை சுயமாக உருவாக்கி கொள்கின்றனர். அவ்வாறு தனது இளமைக் காலம் முழுவதையும் வறுமையிலும், பசியிலும் கழித்து தந்தையார் கைவிடப்பட்டு அழுத்தம் மிகுந்து குழந்தையாக உதவிக்கு யாருமின்றி தனது உழைப்பை மட்டும் கொண்டு இன்று உலகின் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவரே இந்த Dwayne Johnson என்கின்ற The Rock. இன்று இவரது சொத்து மதிப்பு பல மில்லியன் டாலர்களையும் கடந்துவிட்டது. உலகில் அதிகம் பிரபலம் வாய்ந்த நடிகர்களில் ஒருவர் ஆனால்,
வெற்றிகளை எல்லாம் இவர் அத்தனை எளிதில் அடைந்துவிடவில்லை.

The Rock - 2 May 1972 இல் அமெரிக்காவில் பிறந்தவர். இவரது தந்தை ஒரு Wrestling வீரர் இருப்பினும் அவரால் போதியளவு பணத்தை சம்பாதித்துக் கொள்ள முடியவில்லை. வேறு தொழில் செய்யும் எண்ணமும் அவரிடம் இருக்கவில்லை. Rock-ன் தந்தைக்கு அவரது குடும்பம் ஒரு சுமையாகவே தென்பட்டது. அதனால், அவர் தனது மகனையும், மனைவியையும் நிற்கதியாக விட்டுட்டு தன் மனம் போன வழியில் வாழ ஆரம்பித்தார். சம்பாதிக்கும் பணத்தை குடி பழக்கத்திலும்பெண்களுடனான தொடர்புகளிலும் வீணடிக்க ஆரம்பித்தார். இதனால் Rock-ம் அவரது தாயாரும் மீளமுடியாத வறுமைக்கு தள்ளப்பட்டார்கள். மிக விரைவிலேயே தாயும், தந்தையும் விவாகரத்துப் பெற அவர்களது வறுமை மேலும் கொடூரமானது. தன்னைச் சுற்றியிருந்த பிரச்சினைகளும், வறுமையும் மிகுந்த மன அழுத்தத்திற்குள் தள்ளியது.

அப்போது அவரது வயது 14 மட்டுமே. Rock பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருக்க குடும்பத்தின் பசியாற்ற வேலை தேட ஆரம்பித்தார் அவரது தாயார். பல நாட்கள் போராடியும் எந்த வேலையும் கிடைக்கவில்லை. இறுதியில் கழிவறைகளை சுத்தம் செய்யும் வேலை கிடைத்தது. தனது மகனுக்காக அதை தொடர ஆரம்பித்தார் அவர். ஒருநாள் Rock-னை பாடசாலையிலிருந்து அழைத்துக் கொண்டு தங்களது வாடகை வீட்டிற்கு திரும்பினார் அவரது தாய். அப்போது, அவர்களது துணிகள் அணைத்தும் வெளியில் போடபட்டிருந்தது. ஒரு மிகப்பெரிய பூட்டைக் கொண்டு அவர்களது வீடு பூட்டப்பட்டிருந்தது. வாடகை கொடுக்க முடியாவிட்டால் இங்கிருந்து வெளியேறி விடுங்கள் என அதில் எழுதப்பட்டிருந்தது நொறுங்கிப் போனார்  ராக்-கின் தாய்.  அதைக் கண்டு அவ்விடத்திலேயே உட்கார்ந்து தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார். தாயின் அழுகையை ராக்கினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வீட்டிற்கு வாடகை கொடுக்கவும் இவர்களிடம் பணம் இருக்கவில்லை செய்வதறியாது கலங்கி நின்றார். தங்களது நிலைமையை புரிந்து பலரிடம் உதவி கேட்டார்கள் சிலர் உதவினார்கள் அந்த உதவியைக் கொண்டு வேறு ஒரு வீட்டிற்கு குடிபெயர்ந்தது ராக்கின் குடும்பம்.

அன்று இரவு Rock-ற்கு தூக்கம் வரவில்லை தந்தையின் புறக்கணிப்பில் தாய் படும் அவஸ்தைகள் இவரது கண் முன்னே தோன்ற ஆரம்பித்தன தனது இந்நிலைக்கு பணம் மட்டுமே காரணம் என்ற முடிவுக்கு வந்தார். எவ்வழியிலும் அதைச் சம்பாதித்து ஒரு கோடீஸ்வரன் ஆகியே தீருவேன் என்ற தனக்குள் வைராக்கியம் கொண்டார். 16 வயதில் பாடசாலையில் படித்துக் கொண்டிருக்கும் போதே ஒரு திருடர் கூட்டத்தில் இணைந்து கொண்டார். அக்குழு நகைக்கடைகள் செல்வந்தர்கள் வீடுகள் என பல இடங்களில் பதம் பார்த்தது. இந்த செயல்களில் எட்டு முறை கைதாகி சிறை சென்றார் ராக்எட்டாவது தடவை சிறை செல்லும்போது நிச்சயம் திருடுவது தனது வாழ்வின் நோக்கம் அல்ல இது தவிர ஒரு மிகப்பெரும் லட்சியம் தனக்காக காத்துக் கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்து கொண்டார். அத்துடன் தனது திருட்டுப் பழக்கத்திற்கு முழுக்கு போட்டார் பாடசாலையில் ராக்-கினை யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள் இவருடன் யாரும் நட்பு வைத்துக் கொள்ளவும் மாட்டார்கள். அதற்குத் தகுந்தவர் போலவே ஒரு முரட்டுக் குணம் கொண்டவராகவும் இருப்பார். ஆனால், இவரது திறமைகளை அடையாளம் கண்டார் அப்பாடசாலையின் உதைப்பந்து பயிற்றுவிப்பாளர் ராக்கினை தனது அணியில் சேர்த்துக் கொண்ட அவர் இரவு பகலாக ராக்கினை பயிற்றுவிக்க ஆரம்பித்தார். உதைபந்தாட்டத்தில் ராக்கினை எவராலும் ஜெயித்து விட முடியவில்லை

இவரது புகழ் பாடசாலைகளுக்கிடையில் மட்டுமல்லாது கல்லூரிகளிலும் பரவ ஆரம்பித்தது பல கல்லூரிகளில் பணம் கொடுத்து ராக்கினை தங்களது கழகத்திலே விளையாட வைத்தார்கள்.
அப்போது Rock-ன் கனவெல்லாம் அமெரிக்காவின் தேசிய உதைப்பந்தாட்ட போட்டியில் விளையாடுவது தான் அதற்காக தேசிய அளவில் உள்ள ஏதாவது ஒரு பிரபலமான கிளப்பில் இணைந்தாக வேண்டியிருந்தது அதற்காக கனடா (Canada) சென்றார் Rock. அங்கிருந்த ஒரு பிரபல கலகத்தில் இணைந்து கொண்டார். இருப்பினும் அங்கிருந்த பயிற்றுவிப்பாளர்களுக்கு ராக்கினை சிறிதும் பிடிக்கவில்லை. ஒரு சில மாதங்களிலேயே அந்த கழகத்தை விட்டு ராக்கினை துரத்தி அடித்தார் அவர். மீண்டும் அமெரிக்கா திரும்பினார் ராக் தனது உதைபந்தாட்ட கனவுகள் எல்லாம் மண்ணாகி விட்டன உதவிக்கு யாருமே இல்லை கையில் மீதம் இருப்பது வெறும் 7 டாளர்கள் மட்டுமே அடுத்தது என்ன செய்வது என்பது கூட அறியாமல் வீதியில் நின்று கொண்டிருந்தார்.

 இதற்குமேல் வேறு வழியில்லை என்ற நிலையில்  தந்தையிடம் உதவி கேட்டு சென்றார். நானும் உங்களைப்போல் Wrestling வீரனாக வேண்டும் அது எனக்குப் பயிற்சி கொடுங்கள் என கூறினார். அதற்கு Wrestling-ல் பணம் சம்பாதிப்பது மிகக் கடினம் எனது வாழ்க்கையை பார்த்துமா உனக்கு இந்த எண்ணம் எனக் கூறி தந்தை மறுத்த போதிலும் விடாப்பிடியாக இருந்து அவரிடம் Wrestling கற்றுக் கொண்டார் ராக்.
 
1996-ல் ராக் தனது முதலாவது WWE விளையாட்டில் கலந்துகொள்ள சென்றார். இவர் wrestling ரிங்குக்குள் நுழைந்ததும் பார்வையாளர்கள் இவருக்கெதிராக கூச்சலிட ஆரம்பித்தார்கள். இங்கிருந்து வெளியேறு என சத்தமிட்டார்கள். இருந்தும் ராக் பின்வாங்கவில்லை பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை ஆராய ஆரம்பித்தார். அவர்களுக்குப் பிடித்தாற் போல தனது நடவடிக்கைகளை மாற்ற ஆரம்பித்தார். ராக்கின் இந்த முயற்சி அவரது வாழ்க்கையையே திருப்பிப் போட்டது. மிக குறுகிய காலத்திலேயே அதிக மக்களால் விரும்பப்படும் Wrestling வீரராக உருவெடுத்தார் ராக்

அவர் எதிர்பார்த்ததை விட மிக அதிகமான பணத்தையும் சம்பாதித்தார். பின் ஒரு மிகப் பெரிய வீட்டை வாங்கி அதில் தனது தாயை குடியேற்றினார். தந்தைக்கும் ஒரு வீட்டை பரிசளித்தார். தனது சிறுவயது கனவுகளான Rolex கடிகாரம், விலை உயர்ந்த சிறந்த கார்கள் என அனைத்தையும் வாங்கிக் குவித்தார் இருந்தும் வெற்றி மீது ராக்  கொண்ட பசி மட்டும் நின்றுவிடவில்லை. இவரது கவனம் Cinema பக்கம் திரும்பியது அவரது 29-வது வயதில் THE SCORPION KING படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும் அதில் ராக் கொடுத்த உழைப்பு Hollywood-னை கவர்ந்து விடவே அடுத்தடுத்து பல படங்கள் ராக்கினை தேடி வர ஆரம்பித்தன. தனது தொழில் மீது இவருக்கு இருந்த பக்தியும் அக்கறையும் அதற்காக இவர் கொடுக்கும் உழைப்பும் பல இயக்குனர்களை மட்டுமல்லாது உலக சினிமாவின் ரசிகர்களையே இவர் வசம் ஈர்த்தது. இவரது படங்கள் அனைத்தும் வசூலை வாரிக் குவிக்க ஆரம்பித்தன. இவரது வருமானம் பல மில்லியன் டாலர்களைக் கடந்தது.

இன்று உலகில் ராக் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களில் ஒருவர் உலகில் மிகுந்த ஆளுமைமிக்க மனிதர்களுள் ஒருவராக பார்க்கப்படுபவர். இன்று இவர் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதி அமெரிக்காவில் வறுமையில் வாழும் ஏழை மாணவர்களுக்கு செல்கின்றது. இதைப்பற்றி ராக்கிடம் வினவப்பட்ட போது அன்று என்னை இந்த சமூகம் வீனானவன் என ஒதுக்கியது. ஒரு உதவாக்கரையாக பார்த்தது. ஆனால், மறைந்திருக்கும் திறமைகளை அடையாளம் கண்டார் எனது பயிற்றுவிப்பாளர் அவரை என்னால் சாதிக்க முடியும் என்பதை முதலில் நம்பினார் அந்த நம்பிக்கையை என் மனதிலும் ஆழமாக விதைத்தார் அன்று அவர் எனக்கு செய்தது இன்று நான் என்னை போல இருக்கும் இளைஞர்களுக்குச் செய்கின்றேன் அவ்வளவு தானே என சிரித்துக் கொண்டே கூறினார்.

இப்படியாக ராக் என்பவரின் வாழ்க்கை அவருடைய உழைப்பால் மாற்றியமைக்கப்பட்டது. ஒருவருடைய வாழ்க்கை மாறுவதற்கான காரணம் நேர்த்தியான குறிக்கோளும், தன்னம்பிக்கையும் கூடிய விடாமுயற்சியும் தான்.

ஒவ்வொருநாளும் உங்களுடைய எண்ணங்கள், குறிக்கோள்கள் அனைத்தையும் நினைத்துப் பார்ப்பது மட்டுமல்லாமல், செயல்படுத்தவும் ஆரம்பித்தால் உங்கள் வாழ்க்கை நிச்சயம் வெற்றியடையும் வாழ்த்துக்கள்.No comments:

Post a Comment